பெல் செயலாண்மை இயக்குனர் பேச்சு மக்கள் நலனுக்காகத்தான் திமுகவுடன் கூட்டணி

மணப்பாறை, டிச.4: மக்கள் நலனுக்காகத்தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறினார்.மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் மக்கள் நலனுக்காக உள்ளோம். கொள்கை ரீதியாகவும், திராவிட பாரம்பரியத்திற்காகவும் திமுகவுடன் எங்களுக்கு நெருக்கமான உறவு உண்டு. உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான அனைத்துக்கும் தேர்தல் நடத்தாமல் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயகத்தை நம்புகின்றவர்கள் இதை மன்னிக்கமாட்டார்கள். இந்துத்துவாவை கைவிடவில்லை என பேசிய உத்தவ் தாக்கரேவின் அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். மேலும் பாபர் மசூதி-ராமர் கோயில் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நிலைபாடு என்பது நாங்கள் 1989ல் என்ன கூறினோமோ அதையே அரசும் பின்பற்றி, வழக்கு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தில் 45 நாட்கள் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றோம் என்றார். பேட்டியின்போது காஞ்சிபுரம் மாவட்ட துணைத்தலைவர் அஜ்மீர், மணப்பாறை ெதாகுதி அமைப்பாளர் மீரான், கிளைப் பொருளாளர் சாகுல்ஹமீது, தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ராஜாமுகமது உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: