4042 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் பணிக்கு அலுவலர்கள் நியமனம்

விருதுநகர், டிச. 4: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ‘மாவட்டத்தில் 20 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 200 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 450 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 3,372 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 4,042 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தல் பணிகளை மேற்கொள்ள 3 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் பணிகளை நடத்த 11 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 39 உதவி தேர்தல் நடத்தும் அலுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் பணிகளை மேற்கொள்ள 11 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 532 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக மொத்தம்  25 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 591 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ உதயகுமார், திட்ட இயக்குநர் சுரேஷ், நேர்முக உதவியாளர் உள்ளாட்சி தேர்தல் பழனி மற்றும் அனைத்து தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: