சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்கை, டிச. 4:  சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழை கடந்த சில நாட்களாக பகல் உள்பட நாள் முழுவதும் பெய்து வருகிறது. சில பகுதிகளில் சாரல் மழையும், சில பகுதிகளில் கனமழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்ததையடுத்து நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மழையால் நகர்ப்பகுதிகள், சாலைகளில் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பல இடங்களில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நின்றன. தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக இளையான்குடியில் 51 மி.மீ மழை பதிவானது. மானாமதுரையில் 33.9 மி.மீ, திருப்பத்தூரில் 26.8 மி.மீ, தேவகோட்டையில் 23.8 மி.மீ, காளையார்கோவிலில் 22.4 மி.மீ, சிவகங்கையில் 21 மி.மீ, திருப்புவனத்தில் 14.4 மி.மீ, சிங்கம்புணரியில் 14 மி.மீ, காரைக்குடியில் 11.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த தொடர்மழையால் விவசாயத்திற்கு பயன் கிடைத்துள்ளது.

Related Stories: