இளையான்குடி பகுதியில் சதமடித்தது கத்தரிக்காய்

இளையான்குடி, டிச. 4:  இளையான்குடி பகுதியில் வரத்து குறைவால் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.100க்கு விற்பனையானது. இளையான்குடி பகுதியில் முனைவென்றி, குறிச்சி, குமாரகுறிச்சி, அரியாண்டிபுரம், சாலைக்கிராமம்,  வடக்கு சாலைக்கிராமம், பிச்சங்குறிச்சி, சமுத்திரம், ஆகிய கிராமங்களில் தோட்டப் பயிரான கத்தரிக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ கத்தரிக்காய் விலை ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தொடர் மழை காரணமாக கத்தரி செடியில் பூ பூப்பது குறைந்தது. இதனால் கத்தரிக்காய் விளைச்சலில் மந்தநிலை ஏற்பட்டு, வரத்து குறைந்ததால் விலை உச்சத்தை தொட்டது. நேற்று நிலவரப்படி இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் ஒரு கிலோ கத்தரி விலை ரூ.100க்கு விற்பணையானது. அதுபோல தேனி, திண்டுக்கல், பாம்பன் பகுதியில் விளையும் மல்லிகை மழை காரணமாக வரத்து குறைந்துள்ளது. நேற்று நிலவரப்படி 100 கிராம் மல்லிகை ரூ.100 வரை விற்பனையானது. கத்தரிக்காய், மல்லிகை பூவின் இந்த திடீர் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், அதை வாங்கும் பிரியர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: