இடிந்து விழுந்த பள்ளி சுவர் மழை பெய்ய வாய்ப்பு மின் கம்பிகளால் ஆபத்து திருவாடானை அருகே பூமிக்குள் புதைந்த கிணறு

திருவாடானை, டிச.4: திருவாடானை அருகே பாரதி நகரில் பழமையான கிணறு ஒன்று பூமிக்குள் திடீரென புதைந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவாடானை அருகே உள்ள கல்லூர் ஊராட்சியை சேர்ந்த பாரதி நகரில் சாரதா 80 என்பவரது ஓட்டு வீட்டிற்கு அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் தேவைக்காக கிணறு தோண்டப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. நேற்று வீட்டின் அருகில் இருந்த அந்த கிணறு திடீரென பூமிக்குள் புதைந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக திருவாடானை தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.அதன்பின் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு துறையினர் உடன் வந்து மண்ணுக்குள் புதைந்த கிணற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணைக் கொட்டி மூடினர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பழமையான கிணறு திடீரென மண்ணுக்குள் புதைந்து விட்டது. சுமார் 7 அடி ஆழம் வரை உள்ளே சென்றுவிட்டது. அருகில் வீடுகள் உள்ளன. அந்த வீடுகளும் பாதிப்பு அடையும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக மூடப்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றனர்.

சாலைகளில் அரிப்பு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு உயரும் நீர்மட்டம் ராமேஸ்வம் தீவுப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இங்கு குடியிருப்பவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாம்பன், தங்கச்சிமடம் அய்யன்தோப்பு, கரீம்நகர் மற்றும் ராமேஸ்வரம் புதுரோடு, அமிர்தாபுரம் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் வருவாய் மற்றும் நகராட்சி துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பழைய கட்டிடங்களின் மேற்கூரைகள் மழைநீர் ஈரத்தில் நன்கு ஊறிப்போய் ஓழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும் மேடான பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வீடடுக் கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகளவில் உயர்ந்துள்ளது.

Related Stories: