உணவு பாதுகாப்பு குழு கூட்டம் கலப்படத்தை தவிர்க்க வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம், டிச.4: திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு குழு கூட்டத்தில் உணவு கலப்படத்தை தவிர்க்க வலியுறுத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் மூலக்கரை அருகில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மண்டல அளவிலான உணவு பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் மற்றும் திருப்பரங்குன்றம் மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த ஹோட்டல், பேக்கரி, செக்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய அவர் வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையிடம் வணிக லைசென்ஸ் பெறுவது எந்த வணிகத்திற்க்கு எந்த விதமான லைசென்ஸ் பெற வேண்டும் மேலும் வணிகர்கள் லைசென்ஸ் பெறும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் குறித்தும் அதேபோல உணவு தயாரிப்பாளர்கள் கலப்படம் இல்லாத உணவுகளை தயாரிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணங்களை தவிர்ப்பது குறித்தும் எடுத்து கூறினார். மேலும் அவர் கூறுகையில் மதுரையில் தயாரிக்கப்படும் கடலை மாவில் கலப்படம் அதிகளவில் இருப்பதாகவும் கூறினார். இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜ்குமார், சிவச்சந்திரன் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: