மலைப்பாதையில் மூடு பனி வாகனங்களை இயக்க சிரமம்

மஞ்சூர், டிச.4: பல மணி நேரம் நீடிக்கும் பனி மூட்டத்தால் மலைப்பாதையில் வாகனங்களை இயக்குவதில் ஓட்டுனர்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் விட்டு, விட்டும் இரவு நேரங்களில் விடிய, விடிய பலத்த மழை பெய்வதுமாக உள்ளது. மழையுடன் கடும் பனி மூட்டமும் நிலவுகிறது. குறிப்பாக மாலையில் துவங்கி இரவு பல மணி நேரம் வரை கடும் பனி மூட்டம் ஏற்படுகிறது. எதிரே உள்ள பொருட்கள் கண்களுக்கு தெரியாத வகையில் பனி மூட்டம் ஏற்படுவதால் மலைப்பாதையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. அதிலும் ஊட்டி மஞ்சூர் சாலை மற்றும் மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர்பவானி பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் பனி மூட்டத்திற்கிடையே அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. விபத்து அபாயம் கருதி மிகவும் மெதுவாகவே வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு மணி நேரத்தில் சென்றடைய வேண்டிய நிலையில் பனி மூட்டம் காரணமாக ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.

Related Stories: