புதிய ஜிஎஸ்டி நடைமுறை கருத்து கேட்பு

கோவை, டிச.4: இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதில் புதிய நடைமுறை அமலாக்கப்படவுள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான வழிமுறை gst.gov.in என்ற அரசு இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் இதில் பரிட்சார்ந்த அடிப்படையில் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம். வரும் 7ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் ரோடு ஏடிடீ வீதியில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.

இதில் ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களின் படிவம், ஆலோசனை, கருத்துகள் பெறப்படும்.  சப்கா விஸ்வாஸ் திட்டத்தில், கோவையில் சட்ட ரீதியான தகராறு தீர்வு திட்டத்தில் 525 விண்ணப்பதாரர்களுக்கு 85 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. 15 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது என கோவை ஜிஎஸ்டி கமிஷனர் ராஜேஷ் சோதி, கூடுதல் கமிஷனர் வம்சதாரா, கண்காணிப்பாளர் சந்திர சுரேஷ் தெரிவித்துள்ளனர்.

Related Stories: