நொச்சிக்கோட்டகம் பகுதியில் உபரிநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு

வேதாரண்யம், டிச.4: வேதாரண்யம் ஊராட்சிஒன்றியம் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அவர் தெரிவித்ததாவது:

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், தகட்டூர் ஊராட்சியில் உள்ள கல்யாணச்சேரி-மாவடி கொல்லைபகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தார்சாலைஅமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி மழைக்காலம் முடிவடைந்தவுடன் தொடங்கப்படும்.

மேலும், கல்யாணச்சேரிசெல்லக்கோன் ஆறு தரைமட்டப் பாலம் வழியாக நொச்சிக்கோட்டகம் பகுதியில் உட்புகுந்த உபரிநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திடஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின் போது, மாவட்டவருவாய் அலுவலர் இந்துமதி, நாகப்பட்டினம் ஆர்டிஓ பழனிகுமார், பிஆர்ஓ செல்வகுமார், வேதாரண்யம் தாசில்தார் சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: