காதல் தோல்வியா? போலீஸ் விசாரணை நீடாமங்கலம் ஒரத்தூர் ரயில்வே கேட் அருகில் பல்லாங்குழி சாலையால் வாகனஓட்டிகள் அவதி

நீடாமங்கலம்,டிச.4: நீடாமங்கலம் ஒரத்தூர் ரயில்வேகேட் அருகில் பல்லாங்குழி சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதியுற்று வருகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக வாகனங்களை ஓட்ட முடியாத நிலையில் மோசமாக இருந்த போது கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன் இந்த சாலை நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூர் வரை பேஜ் ஒர்க்காக சாலை சீரமைக்கப்பட்டது. இருப்பினும் சாலை படுமோசமானது. கடந்த மூன்று மாதங்களாக தற்போது சாலை மிகவும் மோசமான நிலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மெகா பள்ளமாக உள்ளதால் ஆபத்தான நிலையில் அச்சத்தில் வாகனங்கள் ஓட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை நீடாமங்கலம்,தஞ்சை,திருச்சி வழியாக செல்கிறது.இந்த சாலை கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் கிராம சாலையை விட மிகவும் மோசமான சாலையாக தறபோது உள்ளது. நீடாமங்கலம் ரயில்வே கேட் அருகிலும், கடைவீதியிலும், நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி மார்க்கம் செல்லும் ரயில் பாதை ஒரத்தூர் தஞ்சை சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகிலும்,தஞ்சை சாலை ஆதனூர் ரயிவே கேட் அருகிலும்,கோவில்வெண்ணி மணலூர் செல்லும் வழியிலும் நேதிய நெடுஞ்சாலை மெகா பள்ளமாக உள்ளது. இந்த இடங்களில் செல்லும் வாகனங்களில் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் எப்ப என்ன நடக்கும் என்ற அச்சத்தில் வாகனங்களை ஓட்டி சென்று வருகின்றனர்.அது மட்டுமின்றி வெளியூரிலிருந்து இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மழை நீரில் மூழ்கியுள்ள பள்ளத்தில் விட்டு குழந்தைகளுடன் கீழே விழுந்து காயங்களுடன் செல்லும் அவல நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: