மாணவர்கள் நனைந்தவாறு வீடு திரும்பினர் நீடாமங்கலம் பகுதியில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பில் அதிகாரி ஆய்வு

நீடாமங்கலம்,டிச.4:நீடாமங்கலம் பகுதி ரிஷியூரில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பில் அதிகாரிஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதாலும்,வடிகால்களை சரியாக தூர் வாராததாலும் 1000 ஏக்கருக்கு மேல் இளம் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது.அதே போன்று ஒரத்தூர் திருவள்ளுவர் நகர்,காமராஜர்காலனி,ரிஷியூர்,நகர் சாமந்தான் காவேரி , அரிச்சபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

மழை விட்டு விட்டு பெய்து வருவதால் ஆறுகளில் தற்போது குறைவான தண்ணீர் செல்வதால் ஓரளவு மழை நீர் வடிய தொடங்கியது. இந்நிலையில் மழை நீர் சூழ்ந்துள்ள வயல் பகுதிகளான ரிஷியூர்,அரிச்சபுரம்,நகர் சாமந்தான் காவேரி,கட்டையடி உள்ளிட்ட பகுதிகளை திருவாரூர் மாவட்ட மண்டல அதிகாரியும் பிற்படுத்தப்பட்ட நல அலுவலருமான ஜெயராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நீடாமங்கலம் தாசில்தார் கண்ணன்,வருவாய் ஆய்வாளர் கதிரவன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர். அப்போது ஜெயராஜ் கூறுகையில் மழை நீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதி,சாகுபடி செய்துள்ள வயல்பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனுக்குடன் இயந்திரங்கள் வைத்து வடிய விட வேண்டும் என்றார்.

Related Stories: