தடுப்பணை கட்டும் பணிகள் முடியாததால் வீணாக கடலில் கலக்கும் கெடிலம் ஆற்று நீர்

பண்ருட்டி, டிச. 4: பண்ருட்டி அடுத்த திருவதிகையில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் திருவதிகை அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு மூலம் எய்தனூர், பில்லாலி உள்பட 7க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி அளிக்கப்படும் நிலையில் இருந்து வருகிறது. தற்போது ஒருவார காலமாக பெய்துவரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் நீரோட்டம் மேலோங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் கெடிலம் ஆற்றில் மழைநீர் வெள்ளமாக வந்தது. ஆனால், இந்த மழைநீரை சேமிக்க பாலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டிவரும் தடுப்பணை பணிகள் சரியாக முடிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆற்றில் வரும் மழைநீர் வீணாக கடலுக்குதான் செல்கிறது. இதனை நம்பிதான் விவசாயிகள் உள்ளனர். தற்போது தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்தள்ளனர். கரைகள் இருபுறமும் பலப்படுத்த வேண்டும் என்றும், தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: