அருமனையில் 19ம் தேதி கிறிஸ்துமஸ் விழா ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் பங்கேற்பு நிர்வாகிகளுடன் வசந்தகுமார் எம்பி ஆலோசனை

அருமனை, டிச.4: அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் 22வது கிறிஸ்துமஸ் விழா, வரும் டிசம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 23ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் நடக்கிறது. இதில் மாவட்டத்தின் அனைத்து பிஷப்புகள், அனைத்து சபை பிரிவு போதகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.விழாவின் முதல் 4 நாட்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், கிறிஸ்துமஸ் பாடல் போட்டிகள் நடக்கின்றன. நிறைவு நாளான 23ம் தேதி பகலில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இரவு மத நல்லிணக்க பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது.இந்த வருடம் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் முக்கிய பிரமுகரும், ராஜஸ்தான் மாநில துணை முதல்வருமான சச்சின் பைலட் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வசந்தகுமார் எம்பி விழா நடக்கும் மைதானத்தை பார்வையிட்டு, கிறிஸ்தவ இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது விழா சம்மந்தமான ஏற்பாடுகள் மற்றும் சச்சின் பைலட்டுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் செயலாளர் ஸ்டீபன், நிர்வாகிகள் டென்னீஸ், கென்னஸ், அருள், காங்கிரஸ் அருமனை நகர தலைவர் சங்கரன், பொதுச்செயலாளர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து ெகாண்டனர்.பின்னர் வசந்தகுமார் எம்பி கூறுகையில், அருமனை கிறிஸ்துமஸ் விழாவுக்காக காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் ஏற்பாடுகளை செய்து வருகிறேன். சிறப்பாக விழாவை நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Related Stories: