தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

திருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் விழுப்புரம், வேலூர் மற்றும் கடலூரில் இருந்து 9, 10, 11 மற்றும் 12ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து வருகிற 10 மற்றும் 11ம் தேதி காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம் மற்றும் தண்டரை ரயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை முற்பகல் 11 மணிக்கு வந்தடையும்.பின்னர், திருவண்ணாமலையிலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இதே வழித்தடம் வழியாகவே மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தை மதியம் 3 மணிக்கு சென்றடையும்.கடலூர் திருப்பாதிரி புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 மற்றும் 10ம் தேதி இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் ரயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு 11.08 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர், திருவண்ணாமலையிலிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு போளூர் ரயில் நிலையம், ஆரணி சாலை வழியாக வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை நள்ளிரவு 1 மணிக்கு சென்றடைகிறது. வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆரணி சாலை, போளூர் ரயில் நிலையம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அதிகாலை 3.02 மணிக்கு வந்தடைகிறது.ன்னர் அங்கிருந்து அதிகாலை 3.04 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே சென்று கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தை காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது.வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து 9, 10 மற்றும் 11ம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் ரயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு 11.25 மணிக்கு வந்தடைகிறது.பின்னர் திருவண்ணாமலையிலிருந்து 10, 11 மற்றும் 12ம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே மீண்டும் வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 9, 10 மற்றும் 11ம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு 11.30 மணிக்கு வந்தடைகிறது.பின்னர் திருவண்ணாமலையில் இருந்து 10, 11 மற்றும் 12ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறது. ஹவுராவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் 10ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு நிறுத்தப்பட்டு, 5.23 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.இதேபோல் புதுச்சேரியில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் 11ம் தேதி மதியம் 2.48 மணிக்கு நிறுத்தப்பட்டு, 2.49 மணிக்கு புறப்பட்டு செல்லும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: