ஒன்றரை மணி நேரமே நடந்தது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 99 அரசு பள்ளிகளுக்கு எல்இடி டிவி வழங்கல்

பெரம்பலூர்,டிச.3: பெரம்ப லூர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 99 அரசு பள்ளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் எல்.இ.டி டிவி சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் நேற் று வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள் கண்டு பயன்பெற ஏதுவாக 51 அரசு, ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளிகள் மற் றும் 40மேல்நிலைப் பள்ளி கள் எனமொத்தம் 99பள்ளி ளுக்கு ரூ35 லட்சம் மதிப் பில் 43 இன்ச் அளவுள்ள எல்.இ.டி டிவிக்கள் நேற்று வழங்கப் பட்டன. பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரத் தில் இயங்கிவரும் எம்.ஆர். எப்டயர் தொழிற்சாலை நிறுவனத்தின் சமூக பங்க ளிப்பு திட்டத்தின் கீழ் டிவிக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் சாந்தா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன், , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாரிமீனாள், குழந்தைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், தமிழக அரசால் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்ட எசனை மேற்கு, அ.குடிகாடு, மூங்கில்பாடி தொடக்கப்பள்ளிகளைக் கவுரவிக்கும் வகையில் கேடயம் வழங்கி கலெக்டர் சாந்தா பாராட்டினார். ஜனவரி 4ம் தேதி வரை... தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் நேற்று முதல் ஜனவரி 4ம்தேதி வரை பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம், காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், ஓய்வூதியர், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டங்கள், அம்மா திட்ட முகாம், சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கும்.

Related Stories: