தேர்தல் நடத்தை விதிமுறை அமல் பெரம்பலூர் குறைதீர்க்கும் கூட்டத்தில் 111 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

பெரம்பலூர், டிச. 3: பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் நேற்று ஒன்றரை மணி நேரம் நடந்த குறைதீர் கூட்டத்தில் 111 கோரிக்கை மனுக்கள் குவிந்தன. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக ஊரக பகுதிகளுக்கு நடத்தப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார். இதன்படி 6ம் தேதி மனுதாக்கல் தொடங்கி 13ம் தேதி வரை நடக்கிறது. 16ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 18ம் தேதி மனுக்கள் வாபசும் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு 27ம் தேதி நடக்கிறது. 2ம் கட்ட வாக்குப்பதிவு 30ம் தேதி, ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 4ம் தேதி தேர்தல் நடவடிக்கை முடிவு பெறுகிறது.

6ம் தேதி பதவியேற்பும் முதல்கூட்டமும் நடக்கிறது. 11ம் தேதி பதவியேற்பு நடக்கிறது. இதனால் நேற்று அறிவிப்பு வெளியான நேரம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இருந்தும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம்போல் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10 மணி முதல் 11.30 மணி வரை நடந்தது. இதில் 111 மனுக்கள் பெறப்பட்டது. பிறகு 11.30மணிக்கு குறைதீர்க்கும் கூட்டரங்கு இழுத்து சாத்தப்பட்டது. மாலையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை வாகனத்தில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படங்கள், இரட்டை இலை வடிவம் கொண்டசெடிகள் பிளாஸ்டர் மூலம் ஒட்டி மறைக்கப்பட்டது.

Related Stories: