இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அனைவருக்கும் வழிகாட்டும் பணியில் பார்வையற்ற அரசு ஊழியர்

பெரம்பலூர்,டிச.3:இன்று (3ம்தேதி) உலக மாற்றுத்திறனாளிகள் தினம். கண்கள் இரண்டும் இல்லாத நிலையில் அனைவருக்கும்வழிகாட்டும்பணியில் பெரம்பலூரில் அரசு ஊழியர் ஈடுபட்டுள்ளார். உடலில் தெரிவது ஊனமல்ல. மனதிலிருப்பதே ஊனம். இவர்களுக்காகத்தான் ஊனமுற்றோர் நலத்துறை என்றிருந்த துறையை மரியாதைப் படுத்தும் விதமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என மாற்றி அரசாணை பிறப்பித்தார். இதனால் பலரும் தன்னம்பிக்கை கொண்டு வாழ்வில் முன்னேறி வருகின்றனர். இதற்கு உதாரணமாக பெரம்பலூரில் ஒருவர் வாழ்ந்து வருகிறார். பெரம்பலூர் வெங்கடேசபுரம், ஜெனிபர் நகரைச் சேர்ந்தவர் பூச்சி மகன் சின்னையன்(51). பிறக்கும்போதே 90சதவீதம் கண்பார்வையின்றி காணப்பட்ட இவருக்கு தனது 13வது வயதில் இரண்டு கண்களும் 100சதவீதம் குருடானது. இருந்தும் வளர வளர கைத்தொழில் ஏதாவது ஒன்று இருந்தால் பிழைத்துக் கொள்ளலாமே என நினைத்து அலுவலக நாற்காலிகளில் காணப்படும் நாற்காலிகளுக்கு ஒயர் பின்னும் தொழிலைக் கற்றுக் கொண்டார். பிறகு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளைப் பெற்ற இவர் வேலைவாய்ப்புக்காகவும் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் 1997ல் இவருக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பழுதடைந்த நாற்காலிகளை பின்னும் பணிவாய்ப்பு கிடைத்தது. இதற்காக தினமும் வீட்டிலிருந்து வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி 1.5கிமீ தூரத்தை வானத்தை நோக்கிய படி முகத்தை வைத்துக் கொண்டே குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து விடுவார்.

இவரது கைபடாத நாற்காலிகளே கலெக்டர் அலுவலகத்தில் இல்லையென்னும் நிலைதான் தற்போது வரை உள்ளது. படிப்படியாக 3மாடி ஏறிப்பணிபுரிந்தவர் படிப்படியாக பதவி உயர்வால் தற்போது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திலேயே உதவி வரவேற்பாளர் பணியிடத்தை பெற்றுள்ளார்.அங்கு தினமும் வருகிற நூற்றுக் கணக்கானோரு க்கு தனது துறை அலுவலகத்தில் யாரைப் பார்க்க எந்ததிசையில் சென்றுஅலுவலரை சந்திக்க வேண்டும், எப்போது சிறப்பு முகாம் நடக்கிறது, அடையாள அட்டை பெற என்னென்ன சா ன்றிதழ்களைப் பெற்றுவர வேண்டும் என தெள்ளத் தெளிவாக விளக்கி வருகி றார். 100சதவீதம் கண்கள் குருடான இவர்தான் சம்மந்த ப்பட்ட துறையில் தினமும் 50க்கும் மேற்பட்டோருக்கு வழிகாட்டும் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இதில் மேலும்மேலும் ஆச் சர்யம் என்னவென்றால், இவரது மனைவி விஜயலட்சுமியும் 100சதவீதம் 2கண்களும் குருடாகி பார்வை தெரியாதவர். இவர்களுக்கு ரேவதி என்ற மகள் உள்ளார். பொறியியல் பட் டம் பெற்ற இவருக்கு சின்னையன் வெற்றிகரமாகத் திருமணம் செய்து வைத்து விட்டார். மனைவியோடு வசிக்கும் இவர் எல்ஐசி பணம்செலுத்த, மின் கட்டணம் செலுத்த பரபரப்பான வாகனப் போக்குவரத்து மிகுந்த பெரம்பலூர் நகர வீதிகளில் யார் தயவுமின்றி துல்லியமாக ஒவ்வொரு அடியையும் கணக்கிட்டு நடந்து இலக்கை அடைந்து பணிகளை தானே முடித்து வருகிறார். மளிகைக் கடைக்கும் இவர்தான் செல்வது வழக்கம்.

கண்கள் இரண்டும் தெரியாத ஒருவரால் தினமும் 50 க்கும்மேற்பட்ட நபர்களுக்கு வழிகாட்ட முடியுமென்றால் கண்கள் இருக்கும் நம்மால் ஏன் ஒருசெயலை முழுமையாக செய்து சாதிக்க முடியாது என்பதே இவரது வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடமாகும். இதுகுறித்து லெப்பைக் குடிகாட்டைச் சேர்ந்த மாற் றுத்திறனாளியான சாகுல்அமீது(39) என்பவர் தெரி வித்ததாவது : மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் கால்நடைகளை கணக் கெடுக்கிறது. ஆனால் இந்தியாவில் இன்றுவரை மத்திய, மாநில அரசிடம் மாற்றுத் திறனாளிகளின் சரியான புள்ளிவிவரம் கூட இல்லை. மாற்றுத்திறனாளி கோயில், சர்ச், பள்ளி வாசல்கள்,சாலைசந்திப்புகளில்பிச்சைஎடுக்கும் நிலையில் தான் உள்ளனர். இது வரை 18 வகை ஊனங்களை அங்கீகரித்துள்ளனர். வேலைவாய்ப்பிற்கு 4 சதவிகித இடஒதுக்கீடு வழங் கினாலும், ஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால் பணியில் யாரும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. குறைதீர்க்கும் கூட்ட த்தில் உதவித்தொகை கேட்டு மனுசெய்தும் உரிமை கிடைக்கவில்லை. மாற்றுத்தி றனாளிகுளும் தேர்தலில் போட்டியிட அனுமதிகொடு த்த ஆணையம், எங்களுக் கான இடத்தை ஒதுக்கீடு செய்யவில்லை என மனம் வெதும்பி தெரிவித்தார்.

Related Stories: