வெள்ளக்காடானது ஜெயங்கொண்டம் பகுதி

ஜெயங்கொண்டம், டிச.1: ஜெயங்கொண்டம் பகுதியில் பல இடங்களில் ஏரிகள் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வெள்ள நீர் ஆறுபோல் வழிந்தோடுகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் கடந்த 3 தினங்களாக 217 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பல ஏரிகள் நிரம்பி வருகின்றன. சில ஏரிகள் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகின்றன. ஜெயங்கொண்டத்தில் உய்யகொண்டான் ஏரி நிரம்பி மழைநீர் வெளியேறி சின்னவளையம் அவங்க நேரில் சென்று, அங்கிருந்து தண்ணீர் வெளியேறி வருகின்றன. இந்த தண்ணீரானது உய்யக்கொண்டார் ஏரியிலிருந்து வெளியேறி திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் புகுந்து அந்த சாலையில் பாதி இடங்களில் இருந்து வடிகால் வசதி இல்லாததால் சாலையிலேயே தண்ணீர் சின்னவளையம் அரங்கேறி வரை செல்கின்றன.

இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி அருகே உள்ள பெயிண்ட் இரும்பு கடை, டெய்லர் கடை உள்ளிட்ட பல கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து செல்கின்றது. பலர் கடைக்குள் இருந்து தண்ணீரை வெளியே வாரியிறைத்து கடையை சுத்தப்படுத்தினர்.ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை இடைக்கட்டு கொக்கரை பெரியபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related Stories: