பெரம்பலூர் நகரில் ஒரே நாளில் 4 வீடுகளில் 25 பவுன், ரூ.50 ஆயிரம் 7 லட்சம் பொருட்கள் திருட்டு

பெரம்பலூர், நவ.29: பெரம்பலூர் நகரில் ஒரேநாளில் 4 வீடுகளில் 25பவுன் தங்கம், 60 இன்ஞ் எல்இடி டிவி, ரூ50 ஆயிரம் ரொக்கம் என ரூ7 லட்சம் மதிப்பில் பொருட்கள் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

மாவட்டத் தலைநகரான பெரம்பலூர் நகரில், தொடர் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அடுத் தடுத்து அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் காரில் வந்த மர்ம நபர்கள் ஒரே நாளில் 3 வீடுகளில் பூட்டை உடை த்துத் திருடிய கொள்ளை சம்பவங்கள் நடந்தன. கடந்த 23ம் தேதி கம்பன் நகரில் வெளி நாட்டில் வசிக் கும் ஒருவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வீட்டின் உரிமையாளர் வந்தால்தான் கொள்ளை போன பொருட்களின் விபரம் தெரியவரும். தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்துவந்தபோதும் போலீ சாருக்கு சவால் விடும்ப டியாக அடுத்தடுத்து கொள் ளை சம்பவங்கள் நடந்தபடி தான் உள்ளது. இதில் மிக வும் மோசமாக நேற்று ஒரே நாளில் 4 வீடுகளில் 25 பவுன் கொள்ளைபோன சம்பவம் நடந்திருப்பது நகர மக்களிடையே பேரச்சத் தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மதனகோபால புரம், 3வது குறுக்குத்தெரு, பாரதிதாசன் நகரில் உள்ள பக்கீர்முகமது என்பவரது வீட்டில் கோபால்சிங் மகன் ராஜாதேசிங்(61) என்பவர் கடந்த 3ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர் பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார். கடந்த 26ம்தேதி வீட்டை பூட்டிவிட்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் அவரது மாமனார் இறந்துவிட்ட துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேற்று காலை 7 மணிக்கு வீடு திரும்பினார். அப் போது வீட்டின் பூட்டுஉடைப ட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது இரவில் பூட்டை உடைத்து கொள்ளையர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதில் ராஜாதேசிங் வீட்டில் வைத் திருந்த 3பவுன் செயின், 2 தங்கக் காசுகள், 4செட் தோடு, பிரேஸ்லெட், மோதிரம் என 7பவுன் தங்க நகை களும், வெள்ளிக் கொலு சும், ரூ15 ஆயிரம் ரொக்கப் பணமும் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதேபோல் துறையூர் சாலை, அரணாரை பிரிவு ரோடு, ஏவிஆர் நகரில் பால சுப்ரமணியன் மனைவி பானு (45).என்பவர் வசித்து வருகிறார். பாலசுப்ரமணி யன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பானு சிவகங்கையில் தமிழ்நாடு ஸ்டேட் கார்ப்பரேசனில் பெண்கள் வளர்ச்சித் துறையில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். மகள் பெரம்பலூர் கல்லூரியில் படித்து வருவ தால் மகளுக்காக இப்பகு தியில் அரணாரையைச் சேர்ந்த ரமேஷ்(54) என்பவ ரதுவீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கிறார்.

இந்நிலையில் பானு கடந்த 25ம்தேதி காரைக்குடியில் உள்ள தனது சொந்த ஊரு க்குச் சென்றுவிட்டு, நேற்று காலை 8 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது, 5 பவு ன் செயின், 2பவுன் பிரேஸ் லெட் 2, 1பவுன் தோடு 3, அரைபவுன் தோடுகள் 5 உள்பட 16 1/2 பவுன், வெள்ளிக் குத்துவிளக்கு, வெள் ளிக் கொலுசு 4ஜோடி, டைட் டன் கோல்டுவாட்ச், 60 இன் ஞ் சைஸ் எல்இடி டிவி மற் றும் ரொக்கப் பணம் ரூ.35 ஆயிரம் கொள்ளை போயுள்ளது கண்டு அதிர்ந்து கண்ணீர் வடித்து அழுதார்.அதேபோல் நேற்று பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை, ராயல் நகர், மேட்டுத் தெரு வில் சிறுவயலூரைச் சேர் ந்த பெரியசாமிமகன் ஜெய ராமன்(58). என்பவர் தங்கி வசித்து வருகிறார். கடந்த 26ம்தேதி தனது வீட்டைப் பூட்டி விட்டு சொந்த கிரா மமான சிறுவயலூருக்கு சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த பவுன் மோதிம், ஜிமிக்கி தோடு என ஒன்றரை பவுன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. அதேபோல், பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள கல்யாண் நகரைச் சேர்ந்தவர்ஆதிமூலம் மகன் ராஜசேகர் (58), இவர் உடல் நலம் சரியில்லாமல் சென் னையில் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். பூட்டி யிருந்த இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவிலிருந்த பட்டுப்புட வைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதன்படி நேற்று ஒரேநாளில் பெரம்பலூர் நகரில் 4வீடுகளில் 25 பவுன் நகை, வெள்ளிக் குத்து விளக்கு, கொலுசு கள், 60 இன்ஞ் எல்இடி டிவி, பட்டுப் புடவைகள் என மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்பில் கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்துத் தகவலறி ந்த பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன், ஏடிஎஸ் பி கிரிதர் ஆகி யோரது உத் தரவின் பேரில், டிஎஸ்பி கென்னடி, இன்ஸ்பெக்டர் நித்யா, எஸ்ஐ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை, தடயவி யல் நிபுணர்கள் சென்று கொள்ளையர்க ளின் கைரேகை மற்றும் தட யங்களை பதிவு செய்த னர். இதுகுறித்தப் புகார்க ளின் பேரில் பெரம்பலூர் போலீசால் வழக்குப் பதி ந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Related Stories: