கலைநிகழ்ச்சி வாயிலாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

மேட்டூர், நவ.19: மேச்சேரி வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில், துறை சார்ந்த திட்டங்கள் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேச்சேரி வட்டார வேளாண்துறை சார்பில் தொழில்நுட்பங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், நேற்று நடந்த கலைநிகழ்ச்சிக்கு வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் சுஜாதா தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் பாலுமகேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் ரவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதி கிராமிய கலை வளர்ச்சி மைய கலைக்குழுவினர் நடத்திய கலைநிகழ்ச்சியில் பாடல்கள் மற்றும் வசனங்கள், நகைச்சுவை மூலமாக வேளாண் தொழில் நுட்பங்கள், மத்திய, மாநில அரசுகளின் திட்டமான பிரதமரின் கிஷான் சம்மன் நிதித்திட்டம், பயிர்காப்பீட்டு திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினர். நிகழ்ச்சியில் மேச்சேரி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சொல்வகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பத்மாவதி, சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: