டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு

சேலம், நவ.19: சேலம் லைன்மேட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, மமகவினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கொண்டலாம்பட்டி பகுதி மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில், மாநகராட்சியின் 47வது வார்டு, லைன்ரோடு ராமலிங்க சாமி கோயில் தெருவில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடியிருப்புகளின் மத்தியில், டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு வரும் நபர்கள், சாலையிலேயே அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். போதையில் அப்பகுதியில் உள்ள பெண்கள், மாணவிகளை பார்த்து கேலி செய்கின்றனர். இதனால், மக்கள் ெதருவில் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த கடையை அகற்ற வேண்டும். இதேபோல், 46வது வார்டு குகை, கறி மார்க்கெட், நரசிங்கபுரம் ெதருவில் சாலைகள் அனைத்தும் பெயர்ந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அவசர நேரத்தில் நோயாளிகளை கூட மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சலையை சீரமைக்க வேண்டும், என அதில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: