தேசிய நூலக வாரவிழா பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கோவில்பட்டி, நவ.19: கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில் டைனமிக் அரிமா சங்கம் சார்பில் 52வது தேசிய நூலக வாரவிழா மற்றும் குழந்தைகள் தினவிழா நடந்தது. சங்க தலைவர் அரிமா பிரான்சிஸ் ரவி தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி, நிர்வாக அதிகாரி சங்கரநாராயணன் முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் அழகர்சாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பட்டைய தலைவரும் அரசு வழக்கறிஞருமான சந்திரசேகர் பேசினார். தொடர்ந்து 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற தலைப்பிலும், 9 முதல் 12ம்வகுப்பு வரை வாசித்தால் வளரலாம் என்ற தலைப்பிலும் பேச்சு போட்டி நடந்தது. நடுவர்களாக நல்லாசிரியர் உலகநாதன், கருப்பசாமி, வக்கீல்ஜெயகிறிஸ்டோபர் ஆகியோர் செயல்பட்டனர்.

கோவில்பட்டியைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பிரிவில் மாணவி கனிகா முதலிடமும், கோபிகா 2வது இடமும் மோனிகா 3வது இடமும் பெற்றனர். 9 முதல் பிளஸ்2 வரையிலான பிரிவில் மாணவி உமாமகேஸ்வரி முதலிடமும், ரேணுகாதேவி 2வது இடமும், ரேவதி 3வது இடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. வெங்கடாசலம் நன்றி கூறினார்.

Related Stories: