குன்னூர், நவ. 14: குன்னூர் அருகே ட்ரம்ளா எஸ்ட்டேட் பகுதி உள்ளது. இப்பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டம் மற்றும் காடுகள் நிறைந்துள்ளது. தண்ணீர் மற்றும் உணவு தேடி இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு காட்டு மாடு, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் இரவு நேரங்களில் வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் நாய்களை பிடிக்க சிறுத்தை ஒன்று வீட்டின் அருகே வந்துள்ளது.