குன்னூரில் காட்டு மாடு தாக்கியதில்குன்னூரில் காட்டு மாடு தாக்கியதில் முதியவர் பலி

குன்னூர், நவ. 14: குன்னூரில் வங்கிக்கு ஓய்வூதியம் பெறச் சென்ற முதியவர் காட்டு மாடு தாக்கி பலியானார்.   நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ பகுதிக்குட்பட்ட ஒய்.எம்.சி.ஏ. பகுதியை  சேர்ந்தவர் சைமன் (87). இவர் அதே பகுதியில் உள்ள வங்கிக்கு ஓய்வூதியம் பெற நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு காட்டு மாடு அவரை  தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சைமன் பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த பொதுமக்கள் காட்டு மாட்டை விரட்டினர். இது குறித்து பொதுமக்கள் வெலிங்டன்   போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவர் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

முதியவர் பலி

Related Stories: