அரியலூர் மாவட்ட வளர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்: சிதம்பரம் எம்பி திருமாவளவன் பங்கேற்பு

அரியலூர், நவ. 14: அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது.குழுத்தலைவரான சிதம்பரம் எம்பி திருமாவளவன் தலைமை வகித்தார். கலெக்டர் ரத்னா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் நடந்து வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் 100 நாட்களுக்கு குறையாமல் வேலை அளிப்பது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது. அடிப்படை வளத்தை உருவாக்குதல், ஊராட்சி அமைப்பு முறையை வலுப்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தீனதயாள் அந்தோதயா யோஜனா திட்டத்தின் மூலம் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அனைத்து ஊராட்சிகளிலும் அமைக்கப்படுவது, ஊனமுற்றோர், நலிவுற்றோர் மற்றும் இளைஞர்களும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பது, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மூலம் நடந்து வரும் சாலை பணிகள் மற்றும் பாலம் கட்டும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து தேசிய சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், விதவையர் ஓய்வூதிய திட்டம் மூலம் நலத்திட்டங்கள் தடையில்லாமல் வழங்குவது.

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா - அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு கழிப்பறை இல்லா வீடுகளில் தனிநபர் கழிப்பறைகள் கட்டுவது. தூய்மை பாரத இயக்கம் நகர்புறம் மற்றும் கிராமின் திட்டம் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும் தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி வழங்குவது. ஒருங்கிணைந்த நீர்வடி பகுதி மேம்பாட்டு திட்ட செயல்பாடு. புதிதாக உருவாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள். பழுதடைந்த மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு பழுது நீக்கம் செய்வது. தேசிய சுகாதார பணி மூலம் அரசு மருத்துவமனையில் பிரசவங்கள் ஊக்குவிக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து பள்ளிசிறார் நலத்திட்டங்கள், டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுவது. சத்துணவு திட்டம் மூலம் மதிய உணவு வழங்கும் திட்டம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் வழங்கப்பட்டு வரும் ஊட்டச்சத்து உணவுகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, அங்கன்வாடி. டிஜிட்டல் இந்தியா ஒவ்வொரு கிராமத்துக்கும் பொது சேவை மையம் மூலம் பொது இணைய சேவை வழங்கும் திட்டம் மூலம் 20 வகையான சான்றிதழ் மற்றும் இ அடங்கல், திருமண உதவி திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

எஸ்பி சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், மகளிர் திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: