வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா

தா.பழூர், நவ.14: அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் தலைப்பின்படி விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவாக கிரீடு வேளாண் அறிவியல் மையம் சோழமாதேவிக்கு விவசாயிகளை அழைத்து செல்லப்பட்டனர்.இந்த நிகழ்ச்சியில் கிரீடு வேளாண்மை அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் ராஜாஜோஸ்லின் விவசாயிகளிடம் கூறுகையில், நுண்ணீர் பாசன முறைகள், அங்கக வேளாண்மை, மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், உழவர் உற்பத்தியாளர் குழு செயல்பாடுகள், விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் மற்றும் மானாவாரி பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் ஈரத்தன்மை நிலைநிறுத்தப்படுகிறது.

மேலும் கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வதால் நிலையான வருமானம் விவசாயிகளுக்கு கிடைக்கும். மேலும் டிரைக்கோடெர்மாவிரிடி பயன்படுத்தி கடலை விதையை நேர்த்தி செய்வதன் மூலம் பூச்சிநோய் தாக்குதலிலிருந்து கட்டுப்படுத்தலாம் என்றும், பிரதம மந்திரி பயிர் காப்பீடு குறித்தும் எடுத்துக் கூறினார்.வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் அறிவுச்செல்வி மண்மாதிரி எடுத்தல் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார். அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் சகாதேவன் வரவேற்றார். அட்மா திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

Related Stories: