பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவு அடைப்பு

கரூர், நவ.14: பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவு அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் தேங்காமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.கரூர் செல்லாண்டிபாளையம் அடுத்துள்ள சாலைப்புதூரில் அமராவதி பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் அமராவதி ஆற்றில் தண்ணீர்வரும்போது நீர்வரத்து இருக்கும். தற்போது ஆற்றில் தண்ணீர் வராததால் வாய்க்காலுக்கு நீர்வரத்தின்றி காணப்படுகிறது. அமராவதி பாசன வாய்க்கால்கள் பல இடங்களில் தூர்வாரப்பட்டது. ஆனால் மேற்கண்ட பகுதியில் தூர் வாராமல் விடப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் உள்ளது. பொதுப்பணித்துறையினர் இந்த வாய்க்காலை கண்டுகொள்ளாமல் விட்டதால் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. பலமுறைகோரிகக்கை விடுத்தும் கண்டுகொள்ளாததால் தற்போது பெய்யும் மழை நீரும் நிலத்தடி நீராக மாறாமல் வீணாகிறது. ஆற்றில் தண்ணீர்வரும் நிலையிலும் இந்த வாய்க்காலுக்கு விடப்படும் நீர் வீணாகத்தான்போகும் நிலைஉள்ளது. எனவே இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளைள அகற்றி வாய்க்காலை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: