யானை கொம்பன் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

நாகை,நவ.14: நாகை மாவட்டத்தில் யானைகொம்பன் நோய் தாக்குதலில் இருந்து சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நாகை மாவட்டத்தில் நடைபெறாமல் இருந்த சம்பா சாகுபடி தற்பொழுது நடந்நது வருகிறது. இதற்கு காரணம் கடைமடை நோக்கி மேட்டூர் அணை தண்ணீர் வருவதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையும் காரணமாக அமைந்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சம்பா சாகுபடியை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் திடீரென பருவமழை மாற்றத்தின் காரணமாக யானைகொம்பன் நோய் பயிர்களை தாக்க தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுவதாவது: ஐப்பசி மாதம் வடகிழக்கு பருவமழை பெய்ய வேண்டும். மார்கழி, தை மாத காலத்தில் தான் பனி பெய்யும். இந்த காலத்தில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்யப்படும். ஆனால் பருவநிலை மாற்ற காரணமாக திடீரென பனி பெய்வதால் யானைகொம்பன் ஈ பூச்சி அதிக அளவில் சம்பா பயிர்களை தாக்கி வருகிறது. இது இலை சுருட்டு புழுவை விட மோசமானது ஆகும். 45 முதல் 55 நாள் கொண்ட இளம் சம்பா பயிரை எளிதில் தாக்கி விடும். இந்த பூச்சி தாக்குதல் காரணமாக 20 முதல் 30 சதவீதம் மகசூல் குறைவு ஏற்படும். இரவு நேரங்களில் இந்த பூச்சி எளிதில் வளருவதற்கு இது வாய்ப்பாக அமைகிறது. எனவே வேளாண்மைதுறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யாகை கொம்பன் நோய் தாக்குதலில் இருந்து விடுபட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.

Related Stories: