கோட்டூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வு பயிற்சி

மன்னார்குடி, நவ.14: கோட்டூர் வட்டார வளமையத்தில் ஒருங்கிணந்த பள்ளிக் கல்வி சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. ஒருங்கிணந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற் றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கோட்டூர் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிர மணியன் தலைமை வகித்தார். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆவணப்படுத்துதல் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில், மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளி ஆயத்தப்பயிற்சி, ஆதார வள மையம் மற்றும் இல்லம் சார்ந்த பயிற்சி ஆகியவற்றின் மூலம் தொடர் பயிற்சி வழங்கி விரைவான முன்னேற்றம் அடைகிறார்கள் என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்தும் வகையிலலும், நன்கு முன்னேற்றம் அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முன்னேற்றம் குறித்து எடுத்து கூறச் செய்வதன் மூலமும் அனைத்து பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் விதமாகவும் பயிற்சி வழங்கப்பட்டது.

வட்டார இயன்முறை மருத்துவர் தீபா, சிறப்பாசிரியர் வீரபாண்டியன் கருத்தா ளர்களாக பங்கேற்று மாற்றுத் திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சியை வழங்கினர்.நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர் செல்வமணி, சிறப்பாசிரியர்கள் சரண்யா, சங்கீதா, சசிகலா, தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் வரவேற்றார். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரி நன்றி கூறினார்.

Related Stories: