சிறுநீரக கற்களை நிரந்தரமாக கரைத்து விடமுடியும்

சேலம் ஜங்ஷன் அருகே ஏஜி காம்ப்ளக்ஸில் மகிழ் ஹோமியோ கிளினிக் உள்ளது. அதன் டாக்டர் மணிவண்ணன் கூறியதாவது:ரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சு பொருட்கள் மற்றும் அதிக உப்புக்களை வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் பணி ஆகும். சில நேரங்களில் சில காரணங்களால் ரத்தத்தில் தாது உப்புக்கள் போதிய நீர்சத்து இல்லாமல் போக உப்புக்கள் கெட்டிப்பட்டு இறுகி சிறுநீரக கற்களாக மாறி தொல்லைப்படுத்த ஆரம்பித்து விடும். சிறுநீர் வரும் பாதைகளில் வலி, தொற்று கற்களால் ரத்தக்கசிவு ஏற்படும். சிறுநீரில் ரத்தம் வரலாம். பொதுவாக மூன்று இடங்களில் தோன்றலாம். சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர் தாரை ஆகியவை அந்த மூன்று இடங்கள் ஆகும்.சிறுநீரக கற்கள் எந்த இடத்தில் உள்ளதோ, அதற்கேற்ப வலி ஏற்படும், சிறுநீரகத்தில் உள்ளே கற்கள் இருந்தால் நடுமுதுகில் வலி ஏற்படக்கூடும்.

அந்த வலி வயிறு, தொடைகளுக்கு பரவும், சில சமயம் சிறுநீர் கற்கள் சிறுநீர் வரும் பாதையை அடைத்து கொள்வதால் வலி மற்றும் வாந்தி, மலம் களிக்கும் உணர்வு, அதிக வேர்வை போன்றவை நோயாளியை கஷ்டப்படுத்தும். சிறுநீர் மஞ்சள் நிரமாகவும் ரத்தம் கலந்தும் வரலாம். இதற்கு ஹோமியோபதி மருத்துவ முறையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் சிறுநீரக கற்களை நிரந்தரமாக கரைத்து விட முடியும். ஒரு முறை கற்கள் கரைத்து விட்டால் திரும்பவும் கற்கள் வராது என்று டாக்டர் மணிவண்ணன் கூறினார்.

Related Stories: