கரும்பு பயிரில் பூச்சி மேலாண்மை செயல் விளக்கம்

தேவதானப்பட்டி, நவ. 14: பெரியகுளம் பகுதியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் கரும்பு பயிரில் பூச்சி மேலாண்மை குறித்த செயல் விளக்கம் செய்தனர். உசிலம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணா வேளாண்மை தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் பெரியகுளம் பகுதியில் தங்கியுள்ளனர். இவர் நேரடியாக விவசாயிகளின் விளைநிலங்களுக்கு சென்று, அவர்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு ஏற்ப பூச்சி தாக்குதல், நோய் தடுப்பு முறை, அதிக மகசூலுக்கான வழிமுறை, இயற்கை சாகுபடியின் பயன்கள் உள்ளிட்டவைகள் பற்றி விவசாயிகளின் அனுபவங்களை கேட்டறிந்தனர்.

மேலும் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பக்களை கொண்டு அதிக மகசூலை பெறுவது, இயற்கை முறையில் நோய் தடுப்பு முறை போன்றவற்றை செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இந்த கிராம தங்கள் திட்டத்தின் கீழ் தேசிய நேசன், யோகேஸ்வரன், சுனந்தகுமார், சரவணக்குமார், அசோக், அபினேஷ் ஆகிய மாணவர்கள் கைலாசபுரத்தில் கரும்பு பயிரில் சூரிய மின்விளக்குப் பொறி மூலம் பூச்சி மேலாண்மை செயல் விளக்கமளித்தனர்.

Related Stories: