பள்ளிபாளையத்தில் தொடர் மழையால் நிரம்பிய தடுப்பணை

பள்ளிபாளையம், நவ.14:  தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட தடுப்பணை, நாமக்கல்  மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நிரம்பியுள்ளது. நாமக்கல் கலெக்டர் மெகராஜ், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும்  வளர்ச்சி திட்டப்பணிகளை நேற்று, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின்  கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார். பயனாளிகள் களியனூர் நல்லான்,  பழனியப்பன், பாலன், தங்கவேல், சுப்ரமணி ஆகியோரை நேரில் சந்தித்து,  திட்டத்தின் பலன் குறித்து பயனாளிகளின் கருத்தை கேட்டறிந்தார். கட்டுமான  பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர்  உத்தரவிட்டார்.

தொடர்ந்து குப்பாண்டபாளையத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையை  பார்வையிட்ட கலெக்டர், தொடர் மழையால் தடுப்பணை நிரம்பி வழிவதை கண்டு  மகிழ்ச்சி தெரிவித்தார். தொடர்ந்து அங்குள்ள மயானத்திற்கு சென்ற கலெக்டர்,  மழையால் ஏற்பட்ட புதர்களை அகற்றி, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும்படி  உத்தரவிட்டார். அப்போது, பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட் அமல்ராஜ், அலமேலு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: