கடத்தூர்-பொம்மிடி சாலையில் ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு

கடத்தூர், நவ.14: கடத்தூர்-பொம்மிடி பிரதான சாலையில், ஒகேனக்கல் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.கடத்தூர்-பொம்மிடி பிரதான சாலையில், கடந்த ஒருவாரமாக தரை வழி கேபிள் பதிக்கும் பணிகள் நடந்தது. பணிகள் முடிந்ததும், குழிகளை மூடி விட்டனர். இந்நிலையில், குழிகள் தோண்டிய போது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைக்காமல் விட்டதால், கடந்த 4நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதே ேபால், 3 இடத்தில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து ேபரூராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: