ஓட்டல்,டீக்கடைகளில் தரமற்ற உணவு விற்பனை தாராளம்

சாயல்குடி, நவ.14:  முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதி கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்கள் தரமற்று உள்ளது. இதனால் அதி

காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கடலாடி,முதுகுளத்தூர்,சாயல்குடி பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் எந்தவொரு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் இம்மூன்று நகரங்களுக்கு தான் வரவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் 50க்கும் மேற்பட்ட டீக்கடைகள், 20க்கும் மேற்பட்ட ஓட்டல்களும் உள்ளன. இங்கு சில ஓட்டல்களில் தயார் செய்யப்பட்டு விற்கப்படும் உணவு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடைகளில் மாதக்கணக்கில் எண்ணெய்யை மாற்றாமல், புதிதாக வாங்கும் எண்ணெய்யை பழயதுடன் கலந்து வடை, பஜ்ஜி என உணவுபொருட்கள் தயாரிக்கின்றனர். பெரும்பாலான ஒட்டல்களில் பிளாஸ்டிக் இலையும், பிளாஸ்டிக் பேப்பரை வைத்தும் உணவுகள் வழங்கப்படுகிறது. டீக்கடை, பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால்கள் முதல் அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், பை போன்ற பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

முதுகுளத்தூரில் வாரந்தோறும் வியாழக் கிழமையும், கடலாடியில் வெள்ளிக் கிழமையும், சாயல்குடியில் சனிக் கிழமையும் வாரச்சந்தை நடக்கிறது. இங்கு விற்கப்படும் உணவு பொருட்களும் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறையினர். பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி முதுகுளத்தூர் ராஜேஸ் கூறுகையில், அதிகாரிகள் அவ்வப்போது ஒவ்வொரு கடைகளிலும் சோதனை நடத்த வேண்டும். அப்போது தான் ஓட்டல், டீக்கடைகளில் பழைய எண்ணையை பயன்படுத்துவதை தடுக்க முடியும். பழைய எண்ணையால் நோய் தான் வரும். மக்களின் நலன் கருதி அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: