பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த கலெக்டர்

திருப்பூர், நவ 14: பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். திருப்பூர் தெற்கு வட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  கரட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெருந்தொழுவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சிற்றூராட்சி உறுப்பினர்கள், சிற்றூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.    

வாக்குச்சாவடி மையங்களில் அமைந்துள்ள மின்சாரம், குடிநீர் மற்றும் சாய்வு தள பாதைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பெருந்தொழுவு பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெருந்தொழுவு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, உதவி திட்ட அலுவலர் கிரி, திருப்பூர் தெற்கு  வட்டாட்சியர் மகேஷ்வரன், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன், மகேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: