மாவட்டம் முழுவதும் 25ல் முழு கடையடைப்பு

ஊட்டி, நவ. 14:  நீலகிரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வரும் 25ம் தேதி மாவட்டம் தழுவிய முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை திரும்பப்பெறக்கோரி, நீலகிரி மாவட்ட திமுக, தோழமை கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திமுக அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.

 மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில் நடந்தது. தேர்தல் பணி செயலாளர் ராமச்சந்திரன், ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், காங்கிரஸ் கட்சி அகில இந்திய உறுப்பினர் சுப்ரமணியம், இ.கம்யூ., மாநில குழு உறுப்பினர் பெள்ளி, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் அட்டாரி நஞ்சன், வி.சி.க. மாவட்ட செயலாளர் சகாதேவன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அக்பர், மதச்சார்பற்ற ஜனதாதளம் ரத்தினம், முஸ்லீம் லீக் ரிஸ்வான், மாவட்ட திமுக துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, பாண்டியராஜ், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை திரும்பப்பெறக்கோரி, திமுக., தோழமை கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் வரும் 19ம் தேதி மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இரண்டாம் கட்டமாக மாவட்டம் தழுவிய முழு அடைப்பு போராட்டமும் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு தலைமை நிர்வாகங்கள் நவ.14ம் தேதி முதல் 20ம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்பமனு பெறக்கோரி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் அனைவரும் உண்ணாவிரத போராட்டமும், முழு கடையடைப்பு போராட்டமும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என ஆலோசனை வழங்கியதை ஏற்று நவ.19ம் தேதி நடைப்பெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டு வரும் 25ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊட்டி ஏடிசி., சுதந்திர திடலில் மாவட்டம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அன்றைய தினமே காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாவட்டம் தழுவிய அளவில் முழு கடையடைப்பு போராட்டமும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தி.மு.க. சார்பில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, சதக்கத்துல்லா, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் மா.கம்யூ., சார்பில், கிரி, சங்கரன், ம.தி.மு.க. சார்பில் ஆரிப்சேட், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஷேக், அக்பர், பொதுநல அமைப்புகள் சார்பில் கோத்தகிரி விஸ்வநாதன், சிவகுமார், வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் பரமேஸ்வரன், சிட்டிசன் போரம் சார்பில் ஜெபரத்தினம், கஜேந்திரன், பில்டர்ஸ் போரம் சார்பில் ஹரிமோகன், சாம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் கட்டாரியா, கமலேஷ், ஒக்கலிகர் சங்கம் சார்பில் சதீஸ், ஊட்டி நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் குலசேகர், இம்தியாஸ், திருப்பூர் ஜவுளிகடை ரகுநாதன், புறநகர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பாரூக், பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில் பிரதீப், பிரிட்ஜோ, பிரவீன், உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஜாபர், தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முஸ்தபா, காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சாதிக், உரிமம் பெற்ற கட்டிட வரைவாளர் சங்கம் சார்பில் மகமுதா, பிரகாஷ், சாதிக் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: