படகு இல்ல சாலையில் இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி, நவ. 14:   ஊட்டி படகு சாலையில் மழைநீர் தேங்கி சேதமடையும் பகுதிகளில் இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் மற்றும்  வளர்ச்சி பணிகள் அனைத்தும் நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதனிடையே, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும்,  குழியுமாக பழுதடைந்து காட்சியளிக்கிறது. இவற்றை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள்  அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  எட்டின்ஸ் சாலையில் உள்ள பள்ளங்கள் தார் ஊற்றி பேட்ஜ் ஒர்க்  செய்யப்பட்டது. இதற்கிடையே, ஊட்டி மத்திய பஸ் நிலையம் பகுதியில் இருந்து  படகு இல்லம், காந்தல் செல்லும் சாலையில் ரயில்வே காவல் நிலையம் அருகிலும்,  சிறுவர் பூங்கா அருகிலும் மழை காலங்களில் மழைநீர் தேங்கி விடுகின்றன.  இதனால், படகு இல்ல சாலை சேதமடைந்து வந்தன. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும்  பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையில்  மழைநீர் தேங்க கூடிய இடங்களில் பழுதடைந்த சாலை அகற்றப்பட்டு அதற்கு பதிலாக  இன்டர்லாக் கற்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதேபோல்,  காந்தல் முக்கோணம் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து  வருகிறது.

Related Stories: