வாட்ஸ் அப் எண் மூலம் மின்தடை புகார்களை தெரிவிக்கலாம்

கோவை,நவ.14: கோவை மின்பகிர்மான வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் மின்தடை, மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடை, மின்மாற்றிகள் போன்ற பிற காரணங்களால் ஏற்படும் மின்தடைகளை 94421-11912 என்ற எண்ணில் ெதரிவிக்கலாம். மேலும், கணினி மையமாக்கப்பட்ட மின்தடை நீக்கம் மையத்தை 1912 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். தவிர, பகுதிகளின் பிரிவு அலுவலக களப்பணியாளர்கள் மற்றும் உதவிமின் பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம். இந்த களபணியாளர்கள் மொபைல் எண் பிரிவு அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, மேட்டுப்பாளையம் செயற்பொறியாளரை 0425-4222961, 94458-51130 என்ற எண்ணிலும், உதவி செயற்பொறியாளர் மேட்டுப்பாளையம் கிராமம் 0425-4222964, 94458-51138, மேட்டுப்பாளையம் நகரம் 94458-51131, காரமடை உதவிசெற்பொறியாளர் 94458-51144, அன்னூர் தெற்கு உதவி செயற்பொறியாளர் 94458-51154, சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் 0422-2450336, 94458-51108, உதவி செயற்பொறியாளர் சீரநாயக்கன்பாளையம் 94458-51109, பேரூர் 94458-51116, தொண்டாமுத்தூர் 94458-51120, மாதம்பட்டி 94458-51124, கு.வடமதுரை செயற்பொறியாளர் 0422-2646138, 94458-51077, உதவி செயற்பொறியாளர் துடியலூர் தெற்கு 94458-51078, துடியலூர் வடக்கு 94458-51084, பெரியநாயக்கன்பாளையம் 94458-51088, கோவில்பாளையம் 94458-51094, சரவணம்பட்டி 94458-51102 ஆகிய எண்ணிகளில் தொடர்பு கொள்ளலாம் என கோவை மின்பகிர்மான வடக்கு மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Related Stories: