தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 98வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை, நவ. 15: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 98வது ஆண்டு விழா மற்றும் வங்கி நிறுவனர் விழா கோவை ஆர்.எஸ். புரம் மண்டல அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 98வது ஆண்டு விழா கோவை வங்கி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கோவை மண்டல மேலாளரும், துணைப் பொது மேலாளருமான ராமநாதன் தலைமை தாங்கினார். கோவை மண்டல முதன்மை மேலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் வாடிக்கையாளர்கள் குத்துவிளக்கு ஏற்றினார்கள். விழாவில் வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடனுதவி வழங்கப்பட்டது. 50 பேர்களுக்கு ரூ. 8 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

கடனுதவிகளை வழங்கிய கோவை மண்டல மேலாளர் ராமநாதன் பேசுகையில், ‘‘வங்கி துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மிகவும் லாபகரமாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கடன் வழங்கும் முகாம்களை நடத்துகிறது. முகாமில் விவசாய கடன், நகை கடன், வீட்டு கடன், வாகன கடன் ஆகியவற்றிக்கு கடன் வழங்கப்பட்டது. வங்கி விரைவில் 100 வது ஆண்டினை அடியெடுத்து வைக்க உள்ளது. வங்கி விரைவில் ரூ.131 லட்சம் கோடி வர்த்தகம், ரூ. ஆயிரம் கோடி லாபம் கொண்டுவர அதிகாரிகள், அலுவலர்கள் சிறப்பாக மேலும் பணிபுரிய வேண்டும்’’ என்றார். முதன்மை மேலாளர் தமிழழகன் நன்றி கூறினார்.

விழாவினையொட்டி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோவை மெயின் கிளை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. போத்தனூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஆர்.எஸ்.புரம் கிளைகள் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டது. சோமையம்பாளையம் கிளை சார்பில் கண் சிகிச்சை முகாம், ரத்த பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளைகள் கோவை மண்டலம் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

Related Stories: