டயாபடீஸ் ஒரு நோய் அல்ல: பிரஷாந்த் மருத்துவமனை டாக்டர் தகவல்

சென்னை, நவ. 14: சமீப காலமாக நாம் அடிக்கடி கேள்விப்படும் வார்த்தை டயாபடீஸ் ஒரு நோய் அல்ல மாறாக இது ஒரு வாழ்க்கை முறைதான். இதற்கு தீர்வு நாம் வாழும் முறையில் தான் உள்ளது. நம் முன்னோர்கள். வாழ்ந்த முறையையும், நம்முடைய வாழ்க்கை முறைையயும் ஒப்பிட்டு பார்த்தால் இதற்கான காரணங்களை எளிதாக புரிந்து கொள்ளலாம். நமக்கு முந்தைய தலைமுறையினர் நடப்பதற்கு யோசித்ததில்லை. அதிக தூரம் போக ேவண்டும் என்றால் சைக்கிளை உபயோகித்தார்கள். தினசரி வாழ்க்கையில் ஓர் ஒழுங்கு இருந்தது. அதிகாலையில் எழுவது, வேளைக்கு சாப்பிடுவது, தேவைக்கு சாப்பிடுவது, போதுமான உடல் உழைப்பும் பயிற்சியும் செய்வது போன்ற மன இறுக்கம் இல்லாமல் வாழ்வது, சரியான ேநரத்திற்கு தூங்க செல்வது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தார்கள். உணவு கலப்படம் இல்லாத சத்தான உணவாக இருந்தது.

மேற்கூறிய சூழல் இன்றைய கால கட்டத்தில் முற்றிலுமாக மாறிவிட்டது.

உணவு பெரும்பாலும் அதிக கலோரிகள் உடனும் நார்ச்சத்து இல்லாமலும் மாற்றப்பட்டுவிட்டது. சுத்தமான தண்ணீர் குடிப்பது குறைந்து குளிர்பானங்கள் குடிப்பது அதிகரித்துள்ளது. இது தவிர மது அருந்துவது, புகை பிடிப்பது நமது இளைய சமுதாயத்திடையே வருந்தத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. உடல் உழைப்பை கணினி ஆக்கிரமித்து விட்டது. இதனால் டயாபடீஸ் சிறு வயதிலேயே வரத்தொடங்கியுள்ளது என்று பிரஷாந்த் மருத்துவமனையின் நீரிழிவு மருத்துவர் டாக்டர் நல்லபெருமாள் தெரிவித்தார்.

Related Stories: