பரமத்தி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

பரமத்திவேலூர், நவ.13: பரமத்தி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம், பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முகாமினை பேரூராட்சி செயல்அலுவலர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செந்தில்குமார் மற்றும் விவேகபிரியா ஆகியோர் துப்புரவு பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர். முகாமில் துப்புரவு பணியாளர்களுக்கும், பேரூராட்சி அலுவலக பணியாளர்களுக்கும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ரத்த பரிசோதனை, காய்ச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் தொற்று நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் குமார், டெங்கு காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்டுத்த வேண்டுமென வழியுறுத்தினார். இம்முகாமில் பரமத்தி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

Related Stories: