அரவக்குறிச்சி பகுதியில் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சம்

அரவக்குறிச்சி, நவ. 13: அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் அதிக அளவில் காய்ச்சல் பரவுவதால் ஏழை எளிய பொதுமக்கள் நலன் கருதி கிராமங்களில் அரசின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி ரத்தப் பரிசோதனை வசதியுடன் சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர், ஈசநத்தம், அம்மாபட்டி, எறுமார்பட்டி, பெரியமஞ்சுவளி, சாந்தப்பாடி உள்ளிட்ட 20 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சியின் கிராமங்களில் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு சளி, தொண்டை வலி காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதில் சிறு குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் அரவக்குறிச்சி, பள்ளபட்டி அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளின் கூட்டம் அலைமோதுகின்றது. சுகாதாரத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் நகரத்தி லுள்ள மருத்துவமனைகளுக்கு கிராம மக்கள் சிரமத்துடன் படையெடுத்து வரும் அவலமான நிலை உள்ளது.அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் அதிக அளவில் காய்ச்சல் பரவுவதால் ஏழை எளிய பொதுமக்கள் நலன் கருதி கிராமங்களில் அரசின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி ரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சையளிக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: