குளித்தலை பெரிய பாலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்

குளித்தலை, நவ. 13: ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் இதேபோல் கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று ஐப்பசி பௌர்ணமி தினத்தை ஒட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.நிகழ்ச்சியை ஒட்டி பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று 10 கிலோ எடை கொண்ட அன்னம் படைக்கப்பட்டு அத்துடன் இனிப்பு வகைகள் பழ வகைகள் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து இறுதியாக அனைவருக்கும் அன்னாபிஷேகத்தில் படைக்கப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த அன்னாபிஷேகத்தில் படைக்கப்பட்ட அன்னத்தை உண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என ஐதீகம் என்பதால் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாட்டினை பிரதோஷ கமிட்டி விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: