கந்தர்வகோட்டை அருகே மூடப்படாத நிலையில் ஆழ்குழாய் கிணறு

கந்தர்வகோட்டை, நவ.13: கந்தர்வகோட்டை அருகே மங்கனூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு சரியாக மூடப்படாத நிலையில் உள்ளது. உடனே அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் தனது வீட்டின் பின்புறம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் பரிதாபமாக இறந்தான். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆழ்குழாய் கிணறுகளை கண்காணிக்கும் பணியும் அவற்றை மூடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கந்தர்வகோட்டை அருகே மங்கனூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சரியாக மூடப்படாத நிலையில் ஒரு ஆழ்துளை கிணறு உள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இடத்தின் உரிமையாளரே அக்கறை கொண்டு அதனை மூடினால் அசம்பாவிதங்களை முன்னதாகவே தடுக்கலாம்.தனியாருக்கு சொந்தமான இடத்தில் இதுபோன்ற அஜாக்கிரதையாக இருப்பவர்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: