பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன் தரக்கூடியது

அரியலூர், நவ. 13:பனைங்கொட்டைகள் விதைப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், பனை மரம் எல்லா வகையான மண்ணிலும் வளரும் என்றா லும் மணல்சாரி மற்றும் இருமண்பாட்டு நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது. அனைத்து மாதத்திலும் நடவு செய்யலாம். ஆனாலும் கார்த்திகை மாதத்தில் நடவு செய்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.பனங்கொட்டைகளை நேரடியாக விதைத்தும், நாற்றுவிட்ட பனங்கிழங்குகளை எடுத்து நட்டும் பனையை வளர்க்கலாம். முதிர்ந்த பனம் பழத்திலிருந்து எடுக் கப் பட்டு மூன்று வாரம் நிழலில் சேமிக்கப்பட்ட பனங்கொட்டைகளை குழிக்கு 3 முதல் 4 வரை போட்டு இலைச்சருகுகளை கொண்டு மூட வேண்டும்.

பனை மரத்தின் வேர் முதல், ஓலை வரை அனைத்தும் மனிதர்களுக்குப் பயன் தரக்கூடியது. அதை உணர்ந்துதான் நம் முன்னோர் பனை மரத்தை அதிகளவில் வளர்த்தனர். பனைமரத்தில் இருந்து கிடைக்க கூடிய நுங்கு, பதநீர், கருப்பட்டி, கற்கண்டு, பனம்பழம், கிழங்கு, சீம்பு ஆகியவை நமக்கு உணவாகவும், பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. மேலும் பனை மரம் தனக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டது போக மீத முள்ளவற்றை வேர் மூலம் நிலத்தில் சேமித்து வைப்பதால், நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப் படுகிறது. இவ்வாறு பலன் தரக்கூடிய பனை மரத்தை அனைவரும் வளர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: