அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

அரியலூர், நவ. 13: அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களின் விபரங்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்தார். பயிற்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு அலுவலர்கள் விபரங்கள், பெயர், முகவரி, பணி விபரம், வாக்காளர் அடையாள அட்டை எண், நிரந்தர முகவரி போன்ற அனைத்து விபரங்களும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து மாவட்ட தகவலியல் அலுவலர் பயிற்சி வழங்கினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் பெறப்படும் வேட்பு மனுக்கள் மற்றும் உறுதிமொழி பத்திரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகு, மாவட்ட தகவலியல் அலுவலர் ஜான் பிரிட்டோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் (தேர்தல்), சந்தானம், நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு, உதவியாளர் (தேர்தல்) அன்பரசு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: