சூளகிரி-ராயக்கோட்டை சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

சூளகிரி, நவ.13: சூளகிரி-ராயக்கோட்டை சாலையில் விபத்துக்களை தடுக்க , வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சூளகிரி -ராயக்கோட்டை தேசிய சாலை வழியாக பெங்களுரு, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு லாரிகள், கன்டெய்னர், கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் உள்ளிட்ட, பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் பெங்களுருக்கு செல்லும் சரக்கு வாகனங்கள், லாரிகள் அதிவேகத்தில் சென்று வருகிறது.  பிரிவு சாலை வழியாக வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது. ஆனால் அசுர வேகத்தில் வரும் வாகனங்களால், அவர்களால் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் சூளகிரி அருகே மேடுபள்ளம் என்ற இடத்தில் தான் அதிகளவில்  வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

நேற்று முன்தினம் கார், லாரி மோதிய விபத்தில் காரின் டிரைவர் பலியானார். இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாக உள்ளது. மேலும் காலை, மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி, சாலையை கடப்பவர்கள் உயிரிழக்கினறனர். இதை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை துறையினர், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: