ஊத்தங்கரை அரசு பட்டுப்பண்ணையில் மல்பெரி நாற்றங்கால் நடவு பணி

கிருஷ்ணகிரி, நவ.13: ஊத்தங்கரை அரசு பட்டுப்பண்ணையில் மல்பெரி நாற்றங்கால் நடவு பணியை வனக்கல்லூரி மாணவிகள் மேற்கொண்டனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 4ம் ஆண்டு பயிலும் பட்டுப்புழுவியல் துறை மாணவிகள் அமுதா, டெபோராவின்ஸி, கவுசல்யா, ஐஸ்வர்யா, மஞ்சு, ரூபதர்ஷினி, சனோஃபர், சிவரஞ்சனி ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஊத்தங்கரையில் 3.77 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் அரசு பட்டுப் பண்ணையில், பட்டுப்புழுவியல் உதவி ஆய்வாளர் மேற்பார்வையில், 2 ஆயிரம் மல்பெரி குச்சிகளை நாற்றங்கால் நடவு செய்தனர்.

Related Stories: