மன்னார்குடி நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

மன்னார்குடி, நவ. 13: மன்னார்குடி நகராட்சியின் சார்பாக தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவர் களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மன்னார்குடி நகராட்சியின் சார்பாக தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாண வர்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு நிலவேம்பு வழங்கும் நிகழ்ச்சியை தியாகராஜன் துவக்கி வைத்தார்.மன்னார்குடி நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரபாகரன், தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் கோமதி ஆகியோர் டெங்கு தடுப்பு விழிப் புணர்வு குறித்து மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கி கூறினர். நிகழ்ச்சியின் மூலம் பள்ளியில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முன்னதாக முதுகலை ஆசி ரியர் அன்பரசு வரவேற்றார். முடிவில் தமிழாசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Related Stories: