மங்கலூர் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

முத்துப்பேட்டை, நவ.13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் பருவ மழை பெய்து வருவதையடுத்து டெங்கு மற்றும் காய்ச்சல் ஏற்படாமல் வட்டார சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மருத்துவக்குழுவினர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அதேபோல் அனைத்து அங்கன்வாடி பள்ளிகளுக்கும் சென்று அதிரடி ஆய்வு ஆய்வு மற்றும் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் நிலவேம்பு கசாயமும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மங்கலூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வட்டார வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பூச்சியல் வல்லுநர் பழனிச்சாமி மாணவர்கள் தாங்கள் இருக்கும் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். டெங்கு கொசுக்கள் எப்படி உருவாகிறது மற்றும் டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். தொடர்ந்து அணைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் கிடந்த தேவையற்ற பொருட்களை அகற்றி கொசு மருந்து புகை அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், நாகராஜ், செவிலியர்கள், மஸ்தூர் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சுகாதார மேற்பார்வையாளர் பழனியப்பன் வரவேற்றார். முடிவில் தலைமையாசிரியை குணாசுந்தரி நன்றி கூறினார்.

Related Stories: